ஹுமாயூன் கபீர் பாஜகவினரை சந்தித்ததாக வீடியோ வெளியாகி அதிர்ச்சி; AIMIM தனித்துப் போட்டி..! - Seithipunal
Seithipunal


294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.

மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வரும் தேர்தலில் வென்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோன்று ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைத் தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்ட பல கோடி ரூபாய் திட்டத்தில் பிரதமர் அலுவலகமும் (PMO) ஒரு அங்கம் வகிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரசிலிருந்து நீக்க்கப்பட்ட ஹூமாயுன் கபீர், Aam Janata Unnayan Party (AJUP) என்ற கட்சியை தொடங்கி, 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஓவைசியின் ஏஐஎம் ஐஎம் (AIMIM) கட்சியுடன் கூட்டணி வைத்தார். இந்த சூழலில், திரிணமூல் காங்கிரஸ் ஹூமாயுன் கபீர் இருக்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் தான் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், சுவேந்து அதிகாரி, ஹிமந்த் பிஸ்வா சர்மா போன்ற அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயல்பட பாஜக கூறியதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.

அத்துடன், மம்தா பானர்ஜியை தோற்கடிக்க பாஜகவிடம் ரூ.1000 கோடி திட்டம் இருப்பதாகவும் முன்பணமாக ரூ.200 கோடி பெற்றதாகவும் , முஸ்லிம்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்றும் அவர்களின் வாக்குகளை பிரித்து பாஜகவுக்கு உதவலாம் என்று அவர் அந்த வீடியோவில் பேசுகிறார். 

இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ AI ஆல் உருவாக்கப்பட்டது என்றும் நான் எந்த தலைவரையும் சந்திக்கவில்லை எனவும் மமதா பானர்ஜி கட்சி செய்யும் சதி வேலை என்றும் ஹுமாயூன் கபீர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏஐஎம்ஐஎம் கட்சி இவருடன் இருந்த கூட்டணியை விலக்கிக் கொண்டு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIMIM to contest independently following the release of a video showing Humayun Kabir meeting with BJP members


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->