அமித் ஷா சந்திப்பின் போது நடந்தது இது தான் - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.!
AIADMK Edappadi Palanisamy Pressmeet 27 July 2021 After Meets BJP Amith Shah at Delhi
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்றனர். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான முக்கிய 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை 11:20 மணியளவில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சி பிரச்சனைகள் தொடர்பாக பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு அதிமுக தரப்பு மறுப்பு தெரிவித்தது.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பிக்கள் நவநீத கிருஷ்ணன், தம்பிதுரை, ரவீந்திரநாத் குமார், சந்திர சேகர் ஆகியோர் இருந்தனர்.
அமித் ஷாவுடனான சந்திப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இந்த பேட்டியில், " மத்திய அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம்.
அவருடன் அரசியல் ரீதியாக எந்த விஷயமும் பேசவில்லை. பிரதமர் மோடியிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மோடியுடன் நடந்த உரையாடல் தொடர்பாக பேசினோம் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
AIADMK Edappadi Palanisamy Pressmeet 27 July 2021 After Meets BJP Amith Shah at Delhi