அகமதாபாத் விமான விபத்து : விபத்து நடந்த இடத்தில் மருத்துவ கல்லூரி விடுதி... 60 மாணவர்கள் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அகமதாபாத்திலிருந்து ஏர் இந்தியா 171 விமானம்,லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து பயங்கரமாக நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேலும், இந்த விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர் என்றும் இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்என்றும் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் 110 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் விழுந்த பகுதியில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது.

இது மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் உணவு அருந்த விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது.

இதனால் 60க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ahmedabad plane crash Medical college hostel at the crash site What is the condition of 60 students


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->