3வது சுற்று வட்ட பாதையில் நுழைந்தது ஆதித்யா எல்1..! - Seithipunal
Seithipunal


3வது சுற்று வட்ட பாதையில் நுழைந்தது ஆதித்யா எல்1..!

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் 1,480 கிலோ எடை கொண்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட அடுத்த 1 மணி நேரம் 3 நிமிடங்களில் அதில் இருந்து 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. 

அதன் பின்னர் இந்த விண்கலம் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி  விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து ஆதித்யா எல்1' விண்கலம் அடுத்தகட்ட உயரத்திற்கு கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் மூன்றாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:- 

"ஆதித்யா-எல்1 மிஷன்: புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக (EBN#3) பெங்களூரு ISTRAC இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த செயல்பாட்டின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன. 

புதிய சுற்றுப்பாதையை அடைந்தது. 296 கிமீ x 71767 கிமீ ஆகும். அடுத்த அதிகரிப்பு (EBN#4) செப்டம்பர் 15-ஆம் தேதியன்று மதியம் 02:00 மணி IST இல் திட்டமிடப்பட்டுள்ளது" என்று அந்தப் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aditya l1 undergoes third bound manoeuvre isro info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->