பொதுநலன் கருதி.! வாகன விபத்துகளை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்., அறிவோம் நாமும்..!!
பொதுநலன் கருதி.! வாகன விபத்துகளை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்., அறிவோம் நாமும்..!!
உலகம் முழுவதும் அந்தந்த நாட்டில் உள்ள அரசாங்கமானது., வாகனங்கள் தொடர்பான மற்றும் அந்தந்த வாகனங்களுக்கான வேகவரம்பில் எத்தனை விதமான புதுமைகளை புகுத்தினாலும்., ஏற்படும் பெரும்பான்மையான விபத்துகளை தற்போது வரை தடுக்க முடிவதில்லை. எங்கோ ஒரு விபத்து அது நாம் இருக்கும் இடங்களுக்கு அருகிலோ அல்லது நமது நாட்டிலோ ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவிலும் தினமும் நடைபெறும் சாலை விபத்துகளில் பெரும்பாலானோர் உயிரிழப்பதும்., படுகாயமடைவதையும் நாம் செய்திகள் மூலமாக தெரிந்துகொண்டுதான் வருகிறோம். மேலும் அவ்வாறு நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகமாக நடைபெறும் இடங்களில் தமிழகமும் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 73,431 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும்., அந்த விபத்துகளில் தமிழகத்தின் சென்னையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி சுமார் 1,301 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும்., கோயம்புத்தூர் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் சுமார் 296 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் வருடத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சாலையில் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் விபத்துகளில் கூறப்படும் ஒரே காரணம் என்னவென்றால் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் சாலைகளில் வாகனங்களை இயக்குவது மட்டுமே என்பது கவலைக்குரியது.
பயண நேரத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்காக எங்களால் இயன்ற சில விதிமுறைகளை பதிவிடுகிறோம்., இதனை பின்பற்றி தங்களை வீட்டில் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்.....!
வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது தங்களுக்கு உறக்கம் வந்தால்., தங்களின் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு குறைந்தது 1 மணி நேரமாவது உறங்குங்கள். 3 மணிநேர இடைவெளிக்கு பின்னர் வாகனத்தை நிறுத்தி விட்டு சூடான தேநீர் அருந்துங்கள்., தங்களின் முகங்களை இதமான வெண்ணீரால் கழுவுங்கள்.

தங்கள் வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எந்த இருக்கையில் இருந்தாலும்., கட்டாயமாக உடற்கவசத்திற்க்கான பட்டையை அணியுங்கள்.

தாங்கள் நீண்ட தூரத்திற்க்கான பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துளீர்கள் என்று தங்களுக்கு முன்னதாகவே தெரியும்., அதன் பட்சத்தில் இரவு 10 மணிக்கு மேலாகவும், காலையில் 5 மணிக்கு உள்ளாகவும் புறப்படும் எண்ணத்தினை தவிர்த்து விடுங்கள்.
தங்களின் இல்லத்தில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களை முன்னிருக்கையில் அமரவிடாதீர்கள்.
தங்களின் பயணத்தில் கைக்குழந்தைகள் இருப்பின் அவர்களை., அவர்களுக்கான இருக்கையில் பட்டைகள் சரியாக பொருத்திவிட்டு வாகனத்தினை இயக்குங்கள்.

இரவு நேரத்தில் அல்லது பகல் நேரத்தில் தாங்கள் பயணம் மேற்கொள்ளும் போது புயல் மழை போன்று கனமழை பெய்யும் போது., வாகனத்தினை இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.
அலைபேசியினை உபயோகம் செய்தவாறே பயணத்தினை மேற்கொள்ளாதீர்கள்..

3 மணிநேரத்திற்க்கு அதிகமாக பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் அதிகமாக உணவருந்திவிட்டு வாகனத்தினை இயக்கினால் விரைவில் உறக்கமானது வந்துவிடும்., ஆகவே போதுமான அளவு உணவை உண்டுவிட்டு வாகனத்தினை இயக்குங்கள்.
விமான பயணங்கள்., இரயில் பயணங்கள் மற்றும் மகிழுந்து பயணங்கள் மேற்கொள்ளும் நபர்கள் சரியாக நேரத்திற்கு சென்று விடலாம் என்று எண்ணி., சாலையில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பின்னர் தங்களின் வாகனத்தினை வேகமாக இயக்கத்தீர்கள்., குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு சென்று சம்மந்தபட்ட இடங்களில் காத்திருப்பதால் மானக்கேடு ஏதும் ஏற்படப்போவதில்லை... இது உங்களின் உயிரை காக்கும்.

சாலையானது இரவு நேரங்களில் வாகனங்களின் இயக்கமில்லாமல் உள்ளது என்று நினைத்து வாகனத்தை வேகமாக இயக்கவேண்டும்., ஏனெனில் அந்த சாலைகளில் வளைவுகள் இருக்கலாம்.
தாங்கள் செல்லும் பாதையில் விபத்து ஏற்பட்டு உள்ளது என்றால்., சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள்... தங்களுக்கு முதலுதவி அளிக்கத் தெரியாத பட்சத்தில் உடனடியாக அவசரஊர்திக்கு தெரிவியுங்கள்.. இதன் மூலமாக உயிர்களை காப்பாற்ற இயலும்...

மேலும் தங்களின் வாகனத்திலேயே முதலுதவி பெட்டியை வைத்திருப்பது நல்லது. நீண்ட தூரத்திற்க்கான பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உங்களின் ஓட்டுனருக்கு தகுந்த இடத்தினை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் உறக்கத்தையும் எண்ணுங்கள்....
இந்த விசயத்தினை தங்களிடம் கூற முற்படும் பொழுது., கடந்த வருடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று நினைவு கூற இதுவே சரியான இடம் என்று நினைக்கிறோம்...
கடந்த வருடம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை அறிவித்த போது., தற்காலிக பணியாளர்கள் மூலமாக வாகனங்கள் இயக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் இருந்து சென்ற பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பணிசுமையின் காரணமாக மிகுந்த களைப்புடன் இருந்துள்ளார்.

பேருந்தை நடுவழியில் நிறுத்திய அவர் பயணிகளிடம் தனக்கு ஆழ்ந்த உறக்கம் வருவதாகவும்., தன்னை அதிகபட்சமாக 1 மணிநேரம் உறங்கவிடும் பட்சத்தில் தங்களை சரியாக காலை இறக்கிவிடுவதாகவும்., இல்லை இல்லை தாங்கள் வாகனத்தை இயக்கிய தீரவேண்டும் என்று கூறும் பட்சத்தில் வாகனத்தினை இயக்க நான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாகனத்தை இயக்கம் பட்சத்தில்., ஏதேனும் விபத்துகள் நேர்ந்தால் என்னை குறைகூற கூடாதென்றும் தெரிவித்துள்ளார். ஒரு நிமிடம் ஆடிப்போன பயணிகள் அவரின் நிலைமையை மதித்து., அவரை தூங்க அனுமதித்துள்ளனர். சுமார் 1 மணிநேரம் உறங்கிய அவரின் அருகிலேயே இருந்த பயணிகள் அவர் உறக்கத்தில் இருந்து எழுந்ததும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் தனக்கு உறக்கம் வருவதை எந்த விதமான களங்கமும் இல்லாமல் உண்மையை தெரிவித்து பயணிகளின் உயிரை காத்த அந்த ஓட்டுனருக்கு அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த நிகழ்வு நாம் காலத்தால் மறந்தது என்றாலும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டிய ஒன்றாக உள்ளது.