திருமணம் குறித்து பேச அழைத்த காதலி குடும்பத்தினர்: நம்பி சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்: பெண்ணின் தந்தை உட்பட 09 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


திருமணப் பேச்சுவார்த்தைக்கு வீட்டிற்குவரவழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பெண்ணின் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த ராமேஸ்வர் கேங்கட் (26) என்ற இளைஞரும், அவரது உறவுக்காரப் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளனர்.

இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஏனெனில் குறித்த இளைஞர் மீது பாலியல் பலாத்கார குற்றப் பின்னணி இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. ஆனாலும்,  இருவரும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் திருமணம் குறித்துப் பேசி முடிவெடுக்கலாம் என பெண்ணின் வீட்டார் அந்த இளைஞரை வரவழைத்துள்ளனர். இதை நம்பி, தனது பெற்றோருடன் அந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், ராமேஸ்வரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் சிகிச்சை பலனின்றி ராமேஸ்வர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 09 பேரைக் போலீசார் கைது செய்துள்ள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய இருவர் தப்பியோடிய நிலையில் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு பேச அழைத்து பெண் விட்டார் இளைஞரை அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் புனேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man was beaten to death in Pune after he went to his girlfriends house to discuss marriage


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->