"நீட் தேர்வு" எழுதிய மாணவன்... 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.! போலீஸ் விசாரணை..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக தகுதி தேர்வான இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியும், சோகத்தையும் உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த முகமது நசீர் (22) என்ற மாணவர் ராஜஸ்தான் மாநிலம் விக்யான் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் முகமது நசீர் ஜெய்ப்பூரில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் சரியாக எழுதவில்லை என்பதால் மனவேதனை அடைந்த முகமது நசீர், நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A student who wrote NEET exam after committed suicide by jumping from the 10th floor in rajasthan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->