3 பவுன் தங்க செயினை காணாமல் பதறிய தம்பதி.! அலேக்காக அபேஷ் செய்த நாய் குட்டி.!
a pet dog swallowed 3 soverign gold from her care takers table
கேரள மாநிலத்தில் வளர்ப்பு நாய் ஒன்று தங்க நகையை முழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலக்காடு பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த நாய் விழுங்கிய நகையின் மதிப்பு ஒன்னேகால் லட்ச ரூபாயாகும்.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ண தாஸ் இவரது மனைவி பேபி. இவர் தனது வீட்டின் படுக்கையறையிலிருக்கும் கண்ணாடியின் முன்பு தான் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை கழற்றி வைத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது நகை மாயமாகி இருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டிற்குள் வெளியிலிருந்து யாரும் வரவில்லை. ஆனாலும் நகை வைத்து இடத்திலில்லை இதனால் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார் பேபி.

வீட்டின் பல இடங்களிலும் நகையை தேடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கும் கோல்டன் ரெட்ரீவர் நாய் பென்சிலை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கவனித்தார். இதனை அவர் கணவரிடமும் தெரிவித்துள்ளார். உடனே இருவரும் நாய்க்குட்டியுடன் மருத்துவமனைக்குச் சென்று அதன் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்துள்ளனர்.
இப்போது வயிற்றில் செயினிருப்பது தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனைக்கு நாய்க்குட்டியை அழைத்துச் சென்று அதற்கு பேதி மருந்து கொடுத்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து வெளியில் எங்கும் விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டனர். மறுநாள் காலை தங்கச்சியின் முழுவதுமாக நாயிடமிருந்து வெளியே வந்திருக்கிறது. அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்.
English Summary
a pet dog swallowed 3 soverign gold from her care takers table