கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு அரசு பேருந்து ஓட்டுநர் கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கத்தியால் குத்தி, தலையில் கல்லை போட்டு அரசு பேருந்து ஓட்டுநரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா ரேவ் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிந்தனூர் பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் சிவசரணப்பா. இவர் பணியில் அலட்சியமாக இருந்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்பு அவரது பணி இடைநீக்கத்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் ரத்து செய்ததையடுத்து, நேற்றில் இருந்து அவர் மீண்டும் வேலைக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவசரணப்பா வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து சிவசரணப்பா அப்பதியில் நேற்று காலை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், பலத்த கத்திக்குத்து காயம் மற்றும் தலை நசுங்கியபடி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A govt bus driver was killed by stabbing him with a stone on his head in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->