கேரளத்தில் பெண் எம்.எல்.ஏவிடம் அத்துமீறிய விவகாரம்? செருப்பால அடிச்சி இருக்கணும்.. சின்மயி ஆவேசம்! - Seithipunal
Seithipunal


கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பெண் எம்.எல்.ஏ ஒருவரிடம் ஆண் அரசியல்வாதி ஒருவர் அனுமதியின்றி நெருங்கி கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றதாக கூறப்படும் காட்சி கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்ற பிந்து கிருஷ்ணா பங்கேற்க வந்திருந்தார்.

அப்போது அங்கு இருந்த செரியான் பிலிப், அவரை வரவேற்கும் விதமாக திடீரென நெருங்கி கட்டிப்பிடிக்க முயன்றதுடன் முத்தமிட முயன்றதாக வீடியோவில் தெரிகிறது. இந்த செயலை எதிர்பார்க்காத பிந்து கிருஷ்ணா உடனடியாக அவரை தடுத்து விலக முயற்சிப்பதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “வீடியோவில் அந்த பெண் அவரைத் தடுக்கிறார். இருந்தும் அவர் மீண்டும் மீண்டும் நெருங்குகிறார். இதைப் பார்த்து சிலர் ‘அவர் செருப்பால் அடித்திருக்க வேண்டும்’, ‘ஏன் சிரித்துக்கொண்டே இருக்கிறார்?’ என்று கேட்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கை சினிமா அல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும், “பல பெண்கள் தங்களது பாதுகாப்பு, வேலை, குடும்ப சூழல் போன்ற காரணங்களால் உடனடியாக கடுமையாக எதிர்வினை கொடுக்க முடியாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் அமைதியாக விலகிச் செல்வது சம்மதம் என்று அர்த்தமல்ல” என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அரசியல் கட்சிகளிலும் பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வு தேவை என்றும், பாலியல் தொல்லை தடுப்பு அமைப்புகள் முறையாக செயல்பட வேண்டும் என்றும் சின்மயி வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அரசியல் தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் தனிநபர் எல்லை மீறல்களைப் பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A case of sexual harassment against a female MLA in Kerala She should have been wearing a sari Chinmayi is obsessed


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->