உ.பியில் அதிர்ச்சி - குடியிருப்புப் பள்ளியில் மாயமான 89 மாணவிகள் - தீவிர விசாரணையில் போலீசார்.!
89 students missing in uttar pradesh
உ.பியில் அதிர்ச்சி - குடியிருப்புப் பள்ளியில் மாயமான 89 மாணவிகள் - தீவிர விசாரணையில் போலீசார்.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் அரசு நடத்தும் குடியிருப்புப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் திடீரென நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டது. அதில், 100 மாணவிகளில் 11 பேர் மட்டுமே இருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வார்டன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி நேஹா சர்மா கூறியதாவது:

"பரஸ்பூர் கஸ்தூரிபா காந்தி குடியிருப்பு பெண்கள் பள்ளியில் திங்கள்கிழமை அதாவது நேற்று இரவு திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு மொத்தம் 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர், ஆனால், ஆய்வின்போது 11 மாணவிகள் மட்டுமே பள்ளியில் இருந்தனர்.
மீதமுள்ள 89 மாணவிகள் பள்ளியில் இல்லாதது குறித்து வார்டன் சரிதா சிங்கிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. குடியிருப்பு பெண்கள் பள்ளிகள் இந்த முறையில் நடத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பிரேம் சந்த் யாதவ் தெரிவிக்கையில், "மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, சம்பவம் தொடர்பாக பள்ளி வார்டன், ஆசிரியர், காவலாளி மற்றும் பிஆர்டி ஜவான் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவர்கள் காணாமல் போன நேரத்தில் பணியில் உள்ள காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட இளைஞர் நல அலுவலருக்கு தனி கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
89 students missing in uttar pradesh