இந்தியாவில் திருமணமான "81,000 ஆண்கள்" தற்கொலை.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
81000 married men committed suicide in India
பெண்களைவிட ஆண்களே திருமணமான பிறகு அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில் தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குடும்ப வன்முறைகளால் துன்புறும் ஆண்களின் புகார்களை ஏற்குமாறும், தற்கொலை செய்துகொள்ளும் ஆண்கள் தொடர்பாக விசாரிக்க மனித உரிமைகள் ஆணையத்துக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் பெண்களுக்கென தேசிய மகளிர் ஆணையம் இருப்பது போன்று ஆண்களின் துயரம் துடைக்க தேசிய ஆடவர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருப்பதாக ஆண்கள் புலம்புகின்றனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் திபான்கர் தத்தா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் குமார் திவாரி "2021ம் ஆண்டில் திருமணமான ஆண்கள் 81,063 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை கூறுகிறது.
எனவே குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு தரப்பு பிரச்னைகளை மட்டுமே சித்திரிக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பி பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தனர்.
English Summary
81000 married men committed suicide in India