7 தேசியக் கட்சிகள் உள்பட 59 மாநில கட்சிகளுடன், சட்ட ஆணையம் இன்று கருத்து கேட்பு கூட்டம் .!!
7 தேசியக் கட்சிகள் உள்பட 59 மாநில கட்சிகளுடன், சட்ட ஆணையம் இன்று கருத்து கேட்பு கூட்டம் .!!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன், சட்ட ஆணையம் சார்பில் இரு நாள் கருத்துக் கேட்பு ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 7) தொடங்கியது.
டெல்லியில் கான் மார்க்கெட்டில் உள்ள லோக் நாயக் பவனில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அரசுக்கு, ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை 2 கட்டங்களாக நடத்தலாம் என மத்திய சட்ட ஆணையமும் பரிந்துரை செய்திருந்தது. இதுகுறித்து, கருத்துத் தெரிவிக்கும்படி 7 தேசியக் கட்சிகள் உள்பட 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்துகளைத் தெரிவித்து கடிதங்களை அனுப்பியிருந்தன.
இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
English Summary
7 national Party 59 State Party Today Meeting