அயோத்தி வழக்கை தொடர்ந்து, மேலும் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்றைய, அயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்க இருக்கிறார்.

தலைமை நீதிபதி பதவியிலிருந்து கோகய் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை தொடர்ந்து, அதற்கு முன்னதாக, அயோத்தி வழக்கில் கோகய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்து கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, ரபேல் போர் விமானங்களை வாங்க எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரும் மனுக்கள், ராகுலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, 2017ம் ஆண்டு நிதிச் சட்டம் தொடர்பான வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை கொண்டு வருவது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் கோகய் தீர்ப்பளிக்க இருக்கிறார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 more case result will be announcing


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal