ஒடிசா ரயில் விபத்து || 40 பேர் உயிரிழக்க காரணம் இதுதான்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதில் 278 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ரயிலில் பயணித்த மற்ற பயணிகள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் மூலம் திரும்பினர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அழைத்துச் சென்றன. 

இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேரில் உடலில் எந்தவித காயமோ, ரத்தம் வந்ததற்கான தடயமோ கண்டறியப்படவில்லை. பஹானாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து நடந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ஏராளமான பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதன் காரணமாக எந்தவித காயமும் இன்றி 40 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 people were electrocuted in the Odisha train accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->