ஜம்மு காஷ்மீரில் 4.1 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்.! மக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது அதிகாலை 5.15 மணியளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும் நிலநடுக்கத்தின் அட்சரேகை 35.06ஆகவும், தீர்க்கரேகை 74.49ஆகவும் இருந்தது. 

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ஜம்மு-காஷ்மீர் அதிக நில அதிர்வு மண்டலத்தில் இருப்பதால், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க 20 மாவட்டங்களிலும் அதிநவீன அவசர செயல்பாட்டு மையங்களை அமைக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 point 1 Magnitude Earthquake Hits Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->