25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - இதுதான் காரணமா?

இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

அதன்படி இந்தக் குழு கடந்த ஆண்டு இறுதி மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரியில் ஆய்வு நடத்திய போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும், கடலுார், விழுப்புரம் சாலையில் அதிகவேக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் ஜனவரி முதல் கடந்த மாதம் 22-ம் தேதி வரை தலைக்கவசம் அணியாத 45,000 பேர் உட்பட மொத்தம் 53,500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக, ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான குறுஞ்செய்தி சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு 5 நாட்களில் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மேலும், விதிமீறலில் ஈடுப்படாமல் லைசன்ஸ் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வந்திருந்தால், போக்குவரத்து துறை அலுவலகத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி லைசென்ஸ் சஸ்பென்ட் செய்யப்பட்ட நபர் 3 மாத காலத்திற்குள் மீண்டும் வாகனம் ஓட்டி விதிமீறலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25000 peoples license cancelled for not wear helmate


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->