2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார்.இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.

இந்தநிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-புதிய வரிகள் குறித்து சமூக ஊடகங்களில் நேற்று ஒரு அறிவிப்பைப் பார்த்தோம். மேலும் தொடர்புடைய அமைச்சகமும் துறையும் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றன.

எந்த நேரத்திலும் பிரதமர் மோடி, அதிபர் புதின் இடையே உக்ரைன் போர் குறித்து உரையாடல் எதுவும் நடக்கவில்லை.முக்கிய சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் பொதுக் கருத்துக்களில் அதிக பொறுப்பையும், துல்லியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒருபோதும் நடக்காத உரையாடலை நடந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியா தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ரஷிய ராணுவத்தில் பணி என்ற அறிவிப்புகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளைத் தவிர்க்க அனைத்து இந்தியர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2,417 Indians expelled Shocking information revealed by the central government


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->