மஹாராஷ்ட்ராவில் இன்று ஒரே நாளில், பிறந்த குழந்தைகள் 12 பேர் உட்பட 24 பேர் அரசு மருத்துவமனையில் பலி!
24 people have died in the Govt hospital in 24 hours, 12 newborn babies included
மகாராஷ்டிரா மாநிலம் நந்தோட்டில் உள்ள சங்கர் ராவ் சவன் மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்திருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நந்தோடில் சங்கர் ராவ் சவன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில், மருந்துகள் இல்லாததாலும், போதிய பணியாளர்கள் பற்றாக்குறையாளும் இன்று பிறந்த 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 24 நோயாளிகள் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ், மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவர் ஆகியோர் துணை முதல்வராக இருந்து நடத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடம் கேட்ட பொழுது, தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
English Summary
24 people have died in the Govt hospital in 24 hours, 12 newborn babies included