பீகாரில் பயங்கரம் - ஒரே நாளில் நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழப்பு.!
22 peoples died drowned water in bihar
பீகாரில் பயங்கரம் - ஒரே நாளில் நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழப்பு.!
பீகார் மாநிலத்தில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"பீகார் மாநிலத்தின் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இருபத்து இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, போஜ்பூரில் ஐந்து பேர், ஜகனாபாத்தில் நான்கு பேர், ரோஹ்டாஸ் மற்றும் பாட்னாவில் தலா மூன்று பேர், தர்பங்கா மற்றும் நவாடாவில் தலா இரண்டு பேர், மாதேபூர், கைமூர் மற்றும் அவுரங்காபாத்தில் தலா ஒருவர் என்று மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
English Summary
22 peoples died drowned water in bihar