நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்க முயற்சி.. பரபரப்பு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற நீதிபதிகள் 21 பேர் அடங்கிய குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க சில முயற்சிகள் நடந்து வருவதாக அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர். 

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி கிருஷ்ணா முராரி எம்ஆர் ஷா மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூடுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பாக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் மீதான அவதூறு கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் நீதித்துறை செயல்பாடுகளை கொச்சைப்படுத்தும் நயவஞ்சகமான முயற்சிகள் சில குறிப்பிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சமூகப் பொருளாதார அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நீதிமன்றங்கள் கையாளும்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சில குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உளளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 retired judges lettered to sc chief justice Chandra Chud


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->