பரபரப்பு.. லஞ்சம், முறைகேடு புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணி நீக்கம்.!!
2 justice dismiss in maharastra for bribe
மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் தனஞ்செய் நிகம். இவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தனஞ்செய் நிகம் முன்ஜாமீன் கேட்டு கடந்த ஜனவரி மாதம் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோல் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சிவில் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இர்பான் சேக், வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தவறாக பயன்படுத்தியது மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த 2 நீதிபதிகள் மீதான புகார்களையும் மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் 2 பேரையும் பணி நீக்கம் செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நீக்க நடவடிக்கை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 justice dismiss in maharastra for bribe