ஆந்திராவை முடக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர்! சாலைகளில் டயர்கள் எரிப்பு! 160 பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
160 buses stopped at Andhra border due to Telugu Desam Party protest
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ. 317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து அதன் மூலம் 118 கோடி ரூபாய் பெற்றதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை இன்று அதிகாலை அவரது பங்களாவில் வைத்து ஆந்திர மாநில போலீசார் கைது செய்து விஜயவாடாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திர மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக இயக்கப்படும் 160 பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ற குப்பம் , சித்தூர் ஆகிய பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் டயர்களை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையில் டயர்களை எரித்து தெலுங்கு தேச கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தெலுங்கு தேச கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.
மறியலில் போராட்டத்தில் ஈடுபடும் தெளிவு தேச கட்சியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வருகின்றனர். வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குப்பம் பகுதிகளில் கடைகளை அடைத்த தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு மாநில எல்லைகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
English Summary
160 buses stopped at Andhra border due to Telugu Desam Party protest