நீட் தேர்வு வினாத்தாள் லீக்கான விவகாரம்; ராஜஸ்தானில் 13 பேரிடம் விசாரணை; NTA சொல்வது என்ன..? - Seithipunal
Seithipunal


இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக (நீட் தேர்வு) நாடு முழுவதும் கடந்த 03-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து ராஜஸ்தான் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியதில், கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர், கடந்த மே ஒன்றாம் தேதி சிகாரில் உள்ள தனது நண்பருக்கு கேள்வித் தாளை பகிர்ந்ததாகவும், அதன் பின்னர் அவர், வாட்ஸ் அப், பயிற்சி மையங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டதும் தெரிய வந்ததுள்ளது.

இவ்வாறு வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வினாத்தாளில் கேட்கப்பட்ட 300 கேள்விகளில் ஏறத்தாழ 150 கேள்விகள் நீட் தேர்வில் அப்படியே இடம் பெற்றிருந்ததாகவும், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான வினாக்கள் ஒத்துப் போனதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டேராடூன், சிகார் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 13 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் கசிவு வதந்தி என்றும் அவை மாணவர்களைக் குழப்புவதற்காகப் பரப்பப்படுபவை எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 People Questioned in Rajasthan Over NEET Question Paper Leak


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->