மனைவியுடன் தகராறு: அறைக்கு தீ வைத்த கணவர் - 10 பேர் காயம் - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் அறைக்கு தீ வைத்ததில் 10 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள திலக் நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரிது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் வேறு ஒரு பெண்ணுடன், சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து மனைவி ரிது, இது தொடர்பாக கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இவர்களிடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டிலிருந்த சிலிண்டரை அடுப்பில் இருந்து வெளியே எடுத்து திறந்து வைத்துள்ளார். இதனால் வீடு முழுவதும் எரிவாயு பரவிய நிலையில் ரிது கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து ரிதுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்தபோது சுரேஷ், லைட்டரை பயன்படுத்தி தீ பற்ற வைத்துள்ளார். இதனால் அறை முழுவதும் பயங்கரமாக தீ பறவியுள்ளது. இந்த தீ விபத்தில் சுரேஷ், ரிது மற்றும் அக்கம் பக்கத்தினர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சுரேஷின் குடும்ப உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வ புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 Injured As husband Sets Room On Fire After Argument With Wife in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->