ஜார்க்கண்டில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 04 பேர் பலி, பலர் மாயம்: மீட்கும் பணிகள் தீவிரம்..!
04 killed many missing in illegal coal mine collapse in Jharkhand
ஜார்க்கண்டில் சட்ட விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இன்று வழக்கம் போல் இந்த நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள், கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினரும் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் நான்கு பேரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளில், சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த இந்த நிலக்கரி சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
04 killed many missing in illegal coal mine collapse in Jharkhand