இந்தியாவிற்குத்தான் வெற்றி..! உலக நாடுகளை சேர்ந்த ராணுவ நிபுணர்கள் அறிவிப்பு!
India vs Pakistan operation sinddor
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சமீபத்திய மோதலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக உலக நாடுகளை சேர்ந்த ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற போர் ஆய்வாளர் டாம் கூபர் தனது புதிய ஆய்வுக் கட்டுரையில், இந்தியா–பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலை மேற்கத்திய ஊடகங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும், பல தவறான தகவல்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா கடந்த வாரம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து துல்லியமான தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் மற்றும் அணு ஆயுதக் கிடங்குகள் குறிவைக்கப்பட்டன. இது போரில் இந்தியா பெற்ற வெற்றியின் முக்கிய சின்னம் என டாம் கூபர் தெரிவித்தார்.
பாகிஸ்தானிடம் ப்ரம்மோஸ் மற்றும் ஸ்கால்ப் வகை ஏவுகணைகள் போன்று மேம்பட்ட ஆயுதங்கள் இல்லாததால் இந்தியாவின் தாக்குதலை தடுக்க முடியவில்லை. நூர்கான் மற்றும் சர்கோதா விமான தளங்கள் பெரும் சேதம் அடைந்தன.
மேலும், பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு, போர்நிறைவு குறித்து பேசியது, அவர்களது ஆயுதவலிமை குறைவையும், தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இயலாமையையும் காட்டுகிறது.
இதேவேளை, ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஜான் ஸ்பென்சர், “இந்தியாவின் உற்பத்தி ஆயுதங்கள் அதன் பலத்தை நிரூபித்துள்ளன; ஆனால் சீன தயாரிப்பு ஆயுதங்கள் அந்த அளவுக்கு இயலவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
India vs Pakistan operation sinddor