கேரளத்து பெண்கள் ஏன் இவ்வுளவு அழகாக இருக்கிறார்கள்.!! உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.!!  - Seithipunal
Seithipunal


கேரளா.... கேரளா என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது அங்குள்ள இயற்கை எழில் கொண்ட பல சுற்றுலா தளங்களும்., கோவில்களும்., மலை சார்ந்த சாலைகளில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளின் ஆபத்து நிறைந்த அழகும்., கடற்கரை கொண்டாட்டமும் தான். 

கேரளாவை கடவுள்களின் பூமி என்றும் கூறுவார்கள்., தேவதைகளின் பூமி என்றும் கூறுவார்கள்.... கேரள தேசத்தை கடவுள்களின் பூமி மற்றும் தேவைகளின் பூமி என்று அழைப்பதற்கு கேரளாவில் உள்ள அழகு நிறைந்த பெண்கள் மற்றும் ஆண்களின் அழகே காரணமாகும். 

பிற மாநிலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் அழகை விட கேரளத்து ஆண்கள் மற்றும் பெண்களின் அழகு தனியாக தெரியும் வகையில் இருக்கும். இன்றளவில் தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பல நடிகைகளின் சொந்த மாநிலம் கேரளவாகும். 

இவர்கள் தங்களின் அழகையும்., ஆரோக்கியத்தையும் பராமரிப்பதன் மூலமாகவே இவ்வாறான அழகை பெற்று வருகின்றனர். இவர்களின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பார்த்து இவர்கள் மட்டும் எவ்வாறு இப்படி இருக்கின்றனர் என்று நினைப்பதும் உண்டு. அவர்களின் அழகு ரகசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

கேரளாவில் உள்ள மக்கள் தங்களின் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு நடனத்தை மேற்கொள்கின்றனர். நடனம் ஆடுவதன் மூலமாக உடல் சரியான எடை மற்றும் அழகுடன் இருப்பது மட்டுமல்லாமல்., ஆரோக்கியத்துடனும் இருக்கிறது. இதுமட்டுமல்லாது கேரளாவில் உள்ள பெண்களில் சுமார் 10 ல் 6 பெண்களுக்கு நன்றாக நடனம் ஆடத் தெரியும். 

கேரளாவில் உள்ள மக்கள் பருகும் நீரில் இருந்து சாப்பிடும் சாப்பாடு வரை அனைத்திலும் மருத்துவம் கலந்துள்ளது. இயற்கையான நீர் மற்றும் உணவு பழக்கம்., வாழ்வியல் முறைகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாகும். 

கேரள மாநிலத்தில் சாதத்திற்கு நவார அரிசியானது அனைத்து தரப்பு மக்களால் உபயோகம் செய்யப்படுகிறது. நவார அரிசியில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக நீண்ட ஆயுள் மற்றும் அழகான உடல் அமைப்பை தருகிறது. 

கேரளாவை பொறுத்த வரையில் மீன்., இறைச்சி மற்றும் முட்டை., அப்பம் என்று அனைத்து இயற்கை உணவுகள் பிரபலமாக இருக்கிறது. கேரளாவில் உள்ள அரிசி., காரசாரமான குழம்பு., பருப்பு சாம்பார்., பாயசம் என்று எதனை சாப்பிட்டாலும் அதில் இயற்கையான ஆரோக்கியம் நிறைந்துள்ளது., இதன் காரணமாக கேரளாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அழகுடன் இருக்கின்றனர். 

என்னதான் பிற மாநிலத்தில் உள்ள பெண்களின் அழகிற்கும்., ஆரோக்கியத்திற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களுக்கு ரசிகர்களாக., அவர்களின் அழகை பார்த்து வியந்து இருந்தாலும்., என் தமிழச்சியின் குணத்திற்கும்., வைக்கும் பாசத்திற்கும்., வீரத்திற்கும்., விவேகத்திற்கும் ஈடாக மற்றொரு தமிழச்சிதான் ஈடாக இயலும்... 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why kerala girls are so cute know that about health and beauty


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal