தேங்காய் எண்ணெய்யை கொண்டு முகத்தில் இப்படி செய்தால்., இவ்வுளவு நன்மைகளா?.!!
use coconut oil facial to protect and have shiny face
தினமும் பல்வேறு விதமான பணி சூழல் கொண்ட பணியிடத்தில் நாம் பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் பணியாற்றும் நபர்கள் சிலர் தங்களின் அழகை பராமரிப்பது வழக்கம். அழகை பராமரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுப்பது வழக்கம். தேங்காய் எண்ணெயின் மூலமாக நமது அழகை பராமரிப்பது குறித்து இனி காண்போம்.
தேங்காய் எண்ணெய்யில் அதிகளவு ஆண்டி-ஆக்சிடென்டுகள் உள்ளது. இதன் மூலமாக நமது சருமத்தின் அழகானது பாதுகாக்கப்படுகிறது. நமது முகத்தில் இருக்கும் முகப்பரு., கரும்புள்ளி மற்றும் தேமல் போன்ற பல பிரச்சனைகளை குறைப்பதற்கு இது உதவுகிறது.
இதுமட்டுமல்லாது தேங்காய் எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ் வாஷ் பொருளில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளது. இதன் மூலமாக பாக்டீரியாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து., நமது அழகை பராமரிக்கிறது.

தேங்காய் எண்ணெய் பேஸ் வாஷ் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி.,
தேயிலை மர எண்ணெய் - (2-3) துளிகள்.,
லாவெண்டர் எண்ணெய் - 2 துளிகள்
தேன் -1 தே.கரண்டி...
தேங்காய் எண்ணெய் பேஸ் வாஷ் செய்முறை:
மேல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதிகளவு எண்ணெய் பசையுடன் இருக்கிறது என்று நினைத்தால் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் முகத்தில் சிறிதளவு நீரை சேர்த்து ஏற்படுத்திவிட்டு., தயாரித்த தேங்காய் எண்ணெய் பேஸ் வாஷை முகத்தில் தேய்த்து., 30 நொடிகளுக்கு பின்னர் இதம் சூடுள்ள நீரால் முகத்தை கழுவினால்., சருமத்தில் உள்ள அழுக்குள் அனைத்தும் வெளியேறி முகமானது பொலிவுடன் இருக்கும்.

இந்த முறையை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை மேற்கொள்ளலாம். இதன் மூலமாக நமது முகம் அழகு பெரும்...
English Summary
use coconut oil facial to protect and have shiny face