இந்த நேரத்தில் பழங்களை சாப்பிட்டால் அவ்வளவு தான்.! உஷார் தகவல்.! - Seithipunal
Seithipunal


பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் , தாதுக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை நம் உணவுகளில் தினசரி எடுத்துக் கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு நமது உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. மேலும் இது நாள்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 

நாம் உணவுகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லது என்பது போல  பழங்களையும் குறித்த நேரங்களில் சாப்பிட்டால் அவற்றில் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை நம் உடல் முழுமையாக பெற்றுக்கொள்ளும்.

ஆயுர்வேத மருத்துவத்தின் படி  பழங்களை சாப்பிடுவதற்கு என்று நேரங்கள் இருக்கின்றன. அந்த நேரங்களை தவிர்த்து  மற்ற நேரங்களில் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அவை நம் உடலுக்கு எதிர்வினை ஆற்றலாம். பழங்களை சாப்பிடுவதற்கு எந்தெந்த நேரங்கள் உகந்தவை என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பழங்கள் எளிதில் செரிமானமாக கூடியவை என்றாலும், அவற்றின் குளிர்ச்சி தன்மை காரணமாக சூரிய அஸ்தமன நேரங்களிலும் சூர்ய அஸ்தமனதிற்கு பிறகும் பழங்களை சாப்பிடுவது  உடலுக்கு ஏற்றதல்ல. அவற்றில் இருக்கக்கூடிய குளிர்ச்சி தன்மை நம் உடலில் வாதம் மற்றும் கபம் போன்றவற்றை தூண்டும்.

மாலை வேலைகளிலும் உறங்குவதற்கு முன்பும் பழங்களை சாப்பிடுவது நம் தூக்கத்தை தொந்தரவு செய்யலாம். பழங்களில்  எளிமையான கார்போ ஹைட்ரேட்கள் உள்ளன. பழங்களை நாம் உண்ட பின் நமது உடலானது  கார்போஹைட்ரேட்களை எளிதாக உடைத்து விடுகிறது. இவை நம் ரத்தத்தில் விரைவாக கலந்து சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இது நம் தூக்கத்தை பாதிப்பதோடு உடலில்  சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.

மேலும் மாலை வேலைகளில்  உடலின் வளர்சிதை மாற்றம் குறைவதால், கார்போ ஹைட்ரேட்டுகளை ஜீரணிக்க கடினமாகிறது.

பழங்களை எப்போதும் பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக பால் மற்றும் காய்கறிகளுடன் பழங்களை கலப்பது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும், இவை முறையற்ற செரிமானத்திற்கு வழி வகுத்து பழங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை  குறைவான அளவில் உறிஞ்சுவதற்கு வழிவகை செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

times to avoid eatng fruits


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->