மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் முத்திரை..!
The mudra that solves the problem of constipation
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சூஜி முத்திரை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முத்திரைகள் யோககலை தந்த அருமையான ஒன்று. யோகாசனம் செய்ய முடியாதவர்கள் முத்திரைகளை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்.
இது அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்க்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் அவர்கள் எல்லாம் சூஜி முத்திரை செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அதனை எப்படி செய்வது என பார்போம்.
விரிப்பில் நிமிர்ந்து சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் தியானிக்கவும். பின் சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து, அதன் மேல் பெருவிரலை வைக்கவும். ஆள்காட்டி விரல் மட்டும் நேராக வைக்கவும் (படத்தை பார்க்கவும்).
இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் செய்ய வேண்டும். இந்த முத்திரையை செய்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
English Summary
The mudra that solves the problem of constipation