ஆய்வு! தமிழக மக்களின் 97 % பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி...! - Seithipunal
Seithipunal


கடந்த 2 வாரங்களாக, தமிழகத்தில் புதிய வகை ''கொரோனா'' வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகை இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்நிலையில் இன்று, தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் வெளியிடப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை:

அதில் தெரிவித்திருப்பதாவது,"தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29% பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70% பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது.

2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 % பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Study 97percentage of Tamil Nadu people have immunity against corona


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->