கண் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
prevent of eye problams
மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு கண். இதை பாதுகாப்பாக வைத்திருக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று இந்த பதிவில் காண்போம்.
* கண்களின் கண்ணீர் ஓட்டத்தை அதிகப்படுத்த ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கொண்ட பாதாம், வால்நட், சால்மன் மீன்கள் சாப்பிடலாம்.
* முட்டையில் உள்ள லோகின் மற்றும் வியாஸான்தின் இரண்டும் வயதாவதால் ஏற்படும் பார்வை இழப்பு பாதிப்புகள் வராமல் தடுக்க கூடியவை. முட்டையில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் துத்தநாகம் சத்தும் பார்வை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

* வயதாகுவதால் ஏற்படும் பார்வை மங்குதல், கண்புரை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கும் வைட்டமின் சி, ஈ உள்ள உணவுகளான எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யா உதவும்.
* கேரட் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள பீட்டா, கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் பார்வை தெளிவாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
* கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீரும் மிக அவசியம்.