இந்த முத்திரையை ஏன் உயிர் முத்திரை என சொல்கிறார்கள்?..! - Seithipunal
Seithipunal


முதுகு வலி,  இடுப்பு வலி போன்றவற்றிற்கு பிராணா முத்திரை நல்ல பலனை அளிக்கும்.

      முத்திரைகள் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முத்திரைகள் நல்ல பலனை அளிக்கும்.  பிராண முத்திரையை உயிர் முத்திரை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த முத்திரையை செய்யும் போது நமது உயிர் சக்தி அதிகரிக்கும்.

சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம். இதனை செய்யும் போது  கை, கால் நடுக்கம் ஏற்பட்டால் உடனே முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

இந்த முத்திரையை செய்யும் போது நமது உடலின் உயிர் சக்தி அதிகரிக்கும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து பிரச்சனை குணமாகும்.

சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prana Mudra Increase Energy Level


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal