குண்டான உடலை ஸ்லிம்மாக மாற்றும் முள்ளங்கி சூப்.! - Seithipunal
Seithipunal


உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் தங்கி விடுவதே உடல்பருமனிற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இந்த முள்ளங்கி சூப் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால், உடல் எடை குறையும். 

தேவையான பொருட்கள் : 

சிறிய முள்ளங்கி - 1,
முள்ளங்கி இலை - 1 கப்,
மிளகுத்தூள் - சிறிது,
மஞ்சள்தூள் - சிறிது,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - சிறிது,
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

முள்ளங்கி சூப் செய்முறை :

முள்ளங்கியை தோலை சுத்தமாக நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர், முள்ளங்கி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பின்னர் சீரகத்தை போட்டு பொரிந்ததும்,முள்ளங்கி,  முள்ளங்கி இலை, இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். 

வதக்கி எடுத்த முள்ளங்கியை ஆறவைத்து பின்னர், மிக்சியில் போட்டு அரைக்கவும். பின்னர் ஒருபாத்திரத்தில், அரைத்த விழுதுடன், தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் நன்றாக கொதிக்கவிடவும்.

உடல் பருமனை குறைக்கும் முள்ளங்கி சூப் ரெடி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MULLANGI SOUP PREPARATION IN TAMIL


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal