9 தடவை பொறித்த எண்ணெய்யில் சுவையான மொறுமொறு உணவுகளை சாப்பிடுவோரா நீங்கள்?.. ஆபத்து.! - Seithipunal
Seithipunal


பொதுவாக நமது வீடுகள் மற்றும் வெளியிடங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகம் செய்து உணவு தயாரிக்கும் வழக்கம் இருக்கும். இவ்வாறு செய்வது நமது உடல் நலத்திற்கு தீங்கானது. வீடுகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சில நாட்களில் காலியாகிவிடும் என்றாலும், உணவகங்களில் உபயோகம் செய்யப்படும் எண்ணெயின் தரம் இன்று வரை பெரும் கேள்விக்குறியுடன் தான் இருக்கிறது. 

இவ்வாறு மீண்டும் உபயோகம் செய்யும் எண்ணெயில் தயார் செய்யப்படும் உணவுகளை வீடுகளில் செய்தாலும், உணவகத்தில் செய்தாலும் பாதிப்பு அதனை சாப்பிடப்போகும் நமக்கு மட்டும் தான். மீண்டும் மீண்டும் உபயோகம் செய்யப்படும் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் எதிர்வினை புரிந்து உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

இது தீராத நோயை ஏற்படுத்தும். அலர்ஜி பாதிப்பு, உடலின் ஆரோக்கிய செல்கள் பாதித்து உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது, இதய நோய் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். அதிகளவு வெப்பநிலையில் எண்ணெயை சூடேற்றுவதால் ப்ரீ ரேடிக்கல் என்ற நிலைக்கு எண்ணெய் உள்ளாகும். இதனை மீண்டும் சூடேற்றும் பொது டோட்டல் போலார் சேர்மம் உருவாகி, எண்ணெயினை உபயோகம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும்.

இந்த சேர்மத்தில் உள்ள நச்சுத்தன்மையினால் இதய நோய் பாதிப்பு, உடல் பருமன், புற்றுநோய் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறு, நீரழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ந்து எண்ணெய் உபயோகம் செய்யப்படும் பட்சத்தில் ஊட்டச்சத்து மற்றும் இரசாயன பண்புகளை இழந்து உடலுக்கு தேவையற்ற நச்சுக்களை அதிகரிக்கிறது. சுமார் 48 விழுக்காடு பேர் வாரத்தின் 6 முறை தரமற்ற எண்ணெயில் தயார் செய்யப்படும் துரித உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இது உடலின் நலனுக்கு முற்றிலும் தீங்கானது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் உபயோகம் செய்ய கூடாது. தாயின் உணவு தான் குழந்தைக்கும் கிடைக்கும் என்பதால், இரண்டு முறை எண்ணெயை உபயோகம் செய்ய கூடாது. இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கர்ப்ப காலத்தில் கூடுதல் எடை, இதய நோய் போன்ற பிரச்சனைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். மேலும், வயிறு, தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்படும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If Once Used Oil Use many time to Cooking it Will be a Slow Poison


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal