குளிரால் உங்க முகம் வறண்டு போகுதா...? கற்றாழை பேக் போதும்… 10 நிமிடத்தில் பளபளக்கும் சருமம்...!
Does cold dry out your face Just apply aloe vera pack and get glowing skin 10 minutes
குளிர்காலம் வந்துவிட்டால், காற்றில் ஈரப்பதம் குறைந்து பனிப்பொழிவு அதிகரிக்கும். அதன் தாக்கம் முதலில் படுவது நமது சருமத்தில்தான். இயற்கையாக இருக்கும் ஈரப்பசை வேகமாக நீங்கி, முகம் வறண்டு, இழுக்கலாக, உயிரற்ற தோற்றத்தில் மாறிவிடுகிறது.
இதனால் தோல் உரிதல், சுருக்கம், எரிச்சல், பொலிவு குறைவு போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன.
இந்த காலத்தில் சருமத்தை பாதுகாக்க தினமும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். அதோடு, வீட்டிலேயே இயற்கை பொருட்களால் தயாரிக்கும் ‘பேஸ் பேக்’குகள் சருமத்திற்கு கூடுதல் ஊட்டச்சத்து அளிக்கும்.

குறிப்பாக கற்றாழை (Aloe Vera) சருமத்திற்கு இயற்கை நீரேற்றி (natural hydrator) போல செயல்படுகிறது. இது தோலுக்கு ஆழமான ஈரப்பதம், மென்மை, பளபளப்பு ஆகியவற்றை அளிக்கிறது. கற்றாழையைக் கொண்டு தயாரிக்கும் பேஸ் பேக்-களை தொடர்ந்து பயன்படுத்தினால், குளிர்காலத்திலும் உங்கள் முகம் பனித்துளி போல புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.
கற்றாழையின் சரும நன்மைகள்
கற்றாழை:
இயற்கை மாய்ஸ்சரைசர்
எரிச்சல் குறைக்கும்
கருமை நீக்கும்
முகப்பரு தடுக்கிறது
தோல் மென்மை மற்றும் பொலிவு தருகிறது
அதனால் குளிர்கால skincare-க்கு இது “சூப்பர் ஹீரோ” என்றே சொல்லலாம்.
பேஸ் பேக் 1 – ஆழமான ஈரப்பத பேக்
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து, அதனுடன் 1 ஸ்பூன் கிரீம் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து மிருதுவாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் சமமாக தடவி 15–20 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
இந்த பேக் சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்து, வறட்சியை முற்றிலும் கட்டுப்படுத்தும். வாரத்தில் 2 முறை பயன்படுத்தலாம்.
பேஸ் பேக் 2 – டெட்ஸ்கின் நீக்கும் பிரகாச பேக்
2 ஸ்பூன் கற்றாழை ஜெலுடன் 1 ஸ்பூன் தயிர் மற்றும் அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைக்கவும்.
இந்த பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை சுத்தமாகவும், பளிச்செனவும் மாற்றுகிறது. இயற்கையான ‘glow’ கிடைக்கும்.
பேஸ் பேக் 3 – பொலிவு தரும் குங்குமப்பூ பேக்
2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் பாலில் ஊறவைத்த 4–5 குங்குமப்பூ இதழ்கள் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விடவும்.
இந்த பேக் சரும நிறத்தை சமப்படுத்தி, இயற்கை பொலிவை அதிகரிக்கும். குளிரால் சோர்ந்த தோலை புத்துணர்ச்சியாக மாற்றும்.
பேஸ் பேக் 4 – எரிச்சல் குறைக்கும் குளிர்ச்சி பேக்
1 ஸ்பூன் கற்றாழை ஜெலுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து மிருதுவாக கலக்கவும். முகத்தில் தடவி 15–20 நிமிடம் வைக்கவும். பின்னர் மெதுவாக தேய்த்து கழுவவும்.
இந்த பேக் சரும எரிச்சல், எண்ணெய்ப்பசை, அழுக்கு ஆகியவற்றை நீக்கி முகத்திற்கு குளிர்ச்சியையும் சுத்தத்தையும் தருகிறது.
English Summary
Does cold dry out your face Just apply aloe vera pack and get glowing skin 10 minutes