சிறிய விதை… பெரிய பலன்...! ஆளி மற்றும் சியா விதைகள் தரும் அதிசய ஆரோக்கிய ரகசியங்கள்...!
Small seed big benefit amazing health secrets flax and chia seeds
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தை காக்க உதவும் இயற்கை உணவுப் பொருட்களில் ஆளிவிதை (Flax seeds) ஒரு அரிய வரம் எனலாம். சிறிய விதையாக இருந்தாலும், இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நம் உடலுக்கு பெரும் பலனை வழங்குகின்றன. உண்மையில் இது “ஆரோக்கியத்தின் புதையல்” என்று சொல்லக்கூடியது.
ஆளிவிதையில் உள்ள ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய்களின் அபாயத்தை தடுக்கிறது. குறிப்பாக சைவ உணவுப் பழக்கமுள்ளவர்களுக்கு ஒமேகா–3 கிடைக்க இது சிறந்த ஆதாரம்.

மேலும், அதிக நார்சத்து கொண்டதால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். குடல் சுத்தமாக இருந்து செரிமானம் மேம்படும். ப்ராஸ்டேட் மற்றும் மார்பகப் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. வயிற்றில் நீண்ட நேரம் நிறைவுணர்வு தருவதால் உடல் எடை கட்டுப்பாட்டிற்கும் பயன்படும்.
தொடர்ந்து எடுத்துக்கொண்டால் முடி உதிர்வு குறைந்து சருமம் பளபளப்பாகும்.ஆளிவிதையை நேரடியாக சாப்பிடுவது பயனில்லை; அது செரிமானமின்றி வெளியேறிவிடும்.
எனவே லேசாக வறுத்து பொடியாக செய்து தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவில் மோர், சூப், பருப்பு போன்ற உணவுகளில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். அதிக நார்சத்து இருப்பதால் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இல்லையெனில் வயிற்று வலி ஏற்படலாம். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.
வயிறு உப்பிசத்தை தவிர்க்க சர்க்கரை, சீஸ், சோடா, குளூட்டன் போன்றவற்றை குறைக்க வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் நீர் குடித்து, இஞ்சி, சியா விதை, அன்னாசி, சோம்பு, வெள்ளரி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.கலோரி அளவிலும் கவனம் அவசியம்.
வேகவைத்த உணவுகள் குறைந்த கலோரி கொண்டவை; ஆனால் எண்ணெயில் பொரித்த சிப்ஸ், பாப்கார்ன், பிரெஞ்ச் பிரை போன்றவை அதிக கலோரி கொண்டவை. ஆகவே தேர்வு சரியாக இருக்க வேண்டும்.சில உணவு பழக்கங்களும் கவனிக்கப்பட வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம், பால், காபி அல்லது டீ எடுத்துக்கொள்வது உடல் சோர்வையும் எரிச்சலையும் ஏற்படுத்தலாம்.
இரவில் அதிக அரிசி உணவு கொழுப்பை அதிகரிக்கும். ஆரஞ்சு ஜூஸ் வெறும் வயிற்றில் எடுத்தால் நெஞ்சு எரிச்சல் தரலாம். உணவின் முடிவில் தயிர் எடுத்துக்கொள்வது நல்லது.கிரீன் டீ உடல் எடையை குறைக்க, கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தினமும் இரு வேளை எடுத்துக்கொள்ளலாம்.
இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.அதேபோல், சியா விதைகள் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்து செறிவானவை. அதிக நார்சத்து, ஒமேகா–3, கால்சியம், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால் இதய நலம், எலும்பு வலிமை, சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உதவும்.
தண்ணீரில் ஊறும்போது ஜெல் போல பரவி வயிற்றை நிரப்பி பசியை குறைக்கிறது. இதனால் எடை குறைப்புக்கும் உதவுகிறது. இரவு ஊறவைத்து காலை குடிக்கலாம் அல்லது பால், தயிர், ஜூஸ், ஓட்ஸ், சூப் போன்றவற்றில் கலந்து பயன்படுத்தலாம். தினமும் 1–2 ஸ்பூன் போதுமானது.
மூத்த வயதில் தசை இழப்பைத் தவிர்க்க புரதச்சத்து அவசியம். பால், தயிர், பருப்பு, கொட்டை வகைகள், முட்டை, மீன், சோயா போன்ற உணவுகள் உதவும். லேசான உடற்பயிற்சி, எடைப்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை தசை வலிமையை பாதுகாக்கும். வைட்டமின் D மற்றும் கால்சியம் மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம். நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது படுத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
இறுதியாக, ஆரோக்கியமே வாழ்க்கையின் அடிப்படை. பணத்தை விட காலமும், உடல் நலமும் முக்கியம். எளிமையான உணவு, போதிய நீர், நல்ல தூக்கம், மன அமைதி இவையே நீண்ட ஆயுளுக்கும் நலத்திற்கும் உண்மையான ரகசியங்கள்.
English Summary
Small seed big benefit amazing health secrets flax and chia seeds