பல நோய்களைத் தீர்க்கும் காசினிக் கீரை சட்னி - வாங்க பார்க்கலாம்.!
how to make kaasinik keerai chutny
பல நோய்களைத் தீர்க்கும் காசினிக் கீரை சட்னி - வாங்க பார்க்கலாம்.!
மூலிகைகளில் ஒன்று காசினிக் கீரை. இந்தக் கீரையின் இலை மற்றும் வேரை பொடியாக்கி அதனை தேனீருக்கு பதிலாக பருகலாம். இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட அனைத்தும் உள்ளன.
இந்தக் கீரை பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை உடையது. அதனால் இந்தக் கீரையை வைத்து சட்னி தயார் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :-
காசினி கீரை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், உப்பு, அரைத்த தேங்காய், கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய்
செய்முறை:-
முதலில், மிளகாய், வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, அதனுடன் பூண்டையும் சிறிது தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் காசினி கீரையை அம்மியில் நன்றாக அரைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இது நன்கு கொதித்த பின்னர், தட்டி வைத்துள்ள பூண்டு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை அதில் போட வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை கீரையில் கொட்டி, நன்றாக கிளற வேண்டும். இதையடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை கீரையுடன் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான காசினிக் கீரை சட்னி தயார்.
English Summary
how to make kaasinik keerai chutny