காமம் என்றால் என்ன.?! மனிதனுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம்.!!
காமம் என்றால் என்ன.?! மனிதனுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம்.!!
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்லா காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று தெளிவு பட இருக்கிறது.
ஆண் பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி அங்க உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது. மேலும் எந்த சமயத்திலும் அனைத்து காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்து கொள்வது நல்லது.
கனவன் மனைவி, காதலன் காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயரினங்களில் இல்லை. மேலும் எந்த உயரினமும் பரஸ்பரம், திருப்தி அடைதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை. அதனால் பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு காமசாஸ்திரம் அவசியமே.
உடல் நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ அது போல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும். கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் இணையும் போது தான் இன்பத்தின் எல்லை செல்ல முடிகிறது.