DMK உடனான கூட்டணி முறிவு..? விஜய் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார்; இந்த மரபு வருங்காலத்திலும் தொடரும்; IUML தலைவர் பதில்..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 2026 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனாலும், ஆட்சிமையக்க 118 என்ற போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. 

இதில் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில், தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் கூறியிருந்தது.

அதன் பின்னர் தவெக தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது அவருடன் 09 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (மே 21ஆம் தேதி) தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 02 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்தசூழலில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 02 இலாகாக்களுக்கு அமைச்சர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தமிழக வெற்றி கழகத்தின் விருப்பத்தின் காரணமாக விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும் என உறுதிப்படுத்திய நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் நேற்று (மே 22) அன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி ஆளுங்கட்சி அமைச்சரவையில் இணைந்து அதிகாரத்தை பெற்றுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளதாவது;

தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அமைச்சரவை மரபு கிடையாது. தவெக அதைத் தொடங்கியிருக்கிறது. இது இத்துடன் நிற்காது என்றும், இந்த மரபு வருங்காலத்திலும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய் புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரிடம் திமுக கூட்டணியில் இருந்து வெளியெறிவிட்டீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''தவெக அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற்றிருக்கலாம், அதனாலே திமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நாங்கள் சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் நாங்கள் முடிவை சொல்வோம்'' என்று கூறியுள்ளார்.

அத்துடன் திமுக-அதிமுக கூட்டணி பேசப்பட்டதா என்ற கேள்வி எழுப்பியதற்கு, ''அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளுக்குள் பேசப்பட்டதாகவும்,  திமுக சார்பாக எங்களிடத்தில் சொல்லப்பட்டது என்று அதனையும் வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IUML Leader Responds Regarding Alliance with DMK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->