வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை...!! - Seithipunal
Seithipunal


கோடைகாலத்தில் ஆரம்பத்திலேயே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் நண்பர்களுடன் கூடி விளையாட செல்வதை தடுக்க முடியாது.

ஆனால் குழந்தைகளை கொடுமையான வெயில் மற்றும் அதனால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து காக்க முடியும்.

அந்தவகையில் குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை:

உங்கள் குழந்தைகள் அதிக தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு, பழச்சாறு போன்ற புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அருந்துவதை கட்டாயமாக்குங்கள். 

குழந்தைகளின் சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டுங்கள்.

உச்சி வெயில் நேரத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் உடலில் முகம், கைகள் மற்றும் கழுத்து போன்ற சூரிய ஒளிபடும் பகுதிகளில் எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

பிள்ளைகளின் கை, கால்களை கவர் செய்யும் படியான முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வெளியே அனுப்பலாம். பருத்தி ஆடைகளை அணிவிப்பது குழந்தைகளின் சருமத்திற்கு மேலும் ஆரோக்கியமானது. இறுக்கமான உடைகளை தவிர்த்து விடுங்கள்.

வெயிலில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும் குழந்தையின் உடலில் கற்றாழை ஜெல்லை பூசிவிடுங்கள். இது சருமத்தை மென்மையாக்குவதோடு, வெயிலால் சருமத்தில் ஏற்படக்கூடிய வறட்சி, எரிச்சல், தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நீரிழப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி தர்ப்பூசணி கொடுப்பது நல்லது. அது உடலில் நீரின் அளவை ஈடு செய்ய உதவும்.

உலர் பழங்களை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

செய்யக்கூடாதவை:

பாலிஸ்டர், சிஃப்பான் போன்ற செயற்கைத் துணிகளை குழந்தைகளுக்கு அணிவிக்காதீர்கள்.

குழந்தைகளை குளிக்க வைக்க மறக்காதீர்கள். பாக்டீரியா தொற்று மற்றும் தோல் எதிர்விளைவுகளைத் தவிர்க்க கோடையில் தூய்மை மிகவும் முக்கியமானது.

சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம்.

குழந்தைகளை நன்கு ஹைட்ரேட்டாக வைத்திருக்க மறக்காதீர்கள். ஒருபோதும் கவர்ச்சியான பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை கொடுக்காதீர்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது அலர்ஜி, வெயில் கொப்புளங்கள், வியர்க்குரு ஏற்பட்டால் சுயமாக முடிவெடுத்து மருந்து கொடுக்காதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிப்பது நல்லது.

சிறுவர், சிறுமிகள் வெளி இடங்களில் சென்று விளையாடுவதற்கு ஆசைப்பட்டால் அதற்கு கடிவாளம் போடக்கூடாது. அதேவேளையில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

கோடை காலத்தில் காரமான உணவு, எண்ணெய் பலகாரங்கள் மற்றும் துரித உணவு வகைகள் எதையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. 

குளிர்பானங்களில் இனிப்பு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் விரும்புவார்கள் என்பதற்காக அதிக இனிப்பு கொடுத்துவிடக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do's and don'ts for children in the summer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->