சீரகம் சாப்பிடுவதால் இப்படியும் ஆகுமா ? மறந்து கூற அந்த சமயத்தில் சீரகத்தை சாப்பிட்டுவிடாதீர்கள், அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.!
மறந்து கூற அந்த சமயத்தில் சீரகத்தை சாப்பிட்டுவிடாதீர்கள்.!
மிக அதிக மருத்துவ குணங்களை கொண்ட மசாலா வகை உணவுப் பொருள்களில் சீரகமும் மிக முக்கியமான ஒன்று .இதனை அளவாக பயன்படுத்தினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமானது தானே என அதிகமாக பயன்படுத்தினால் பெரும் ஆபத்து தான் உண்டாகும் .
பொதுவாகவே எந்த ஒரு கார உணவு சீரகத்தை பயன்படுத்தாமல் செய்வது இல்லை ஏனெனில் சீரகம் செரிமானம் ஆவதற்கு உதவும் மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் .

பெரும்பாலானோர் உடலுக்கு நல்லது என எண்ணி சீரகத் தண்ணீரை அதிகமாகக் குடிப்பார்கள் அது தவறு இல்லை. ஆனால் உடலில் ஏதேனும் நோய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சீரகம் சாப்பிட வேண்டும் .
அதுமட்டுமின்றி சிலர் சீரகத்தை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பர் .இது முற்றிலும் தவறானது இது மிகப் பெரிய தீங்கை விளைவிக்கக் கூடும்.

நெஞ்செரிச்சல்
அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும் , அளவாக பயன்படுத்துவதும் மிக நல்லது. ஏனெனில் அதிகமான சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் உண்டாக்கும்.
அதிக ரத்த போக்கு
மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது இரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் சீரகத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது.
சர்க்கரையைக் குறைக்கும்
சீரகம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது ஆனால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
கருச்சிதைவு
கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு சீரகமும் ஒரு காரணமாக உள்ளது .சீரகத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் கருச்சிதைவு ஏற்படுவது மட்டுமில்லாமல் குறைப்பிரசவம் உண்டாவதற்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது .மேலும் சீரகம் அதிகமாக சாப்பிடுவதால் வயிறு குமட்டல் வாந்தி போன்றவையும் அதிகமாக ஏற்படும்.
English Summary
dis advantages of eating too much jeera