​குதிகாலில் வெடிப்பா? ஒரே ஒரு எலுமிச்சையில் குதிகால் வெடிப்புக்கு நிரந்தர தீர்வு!! இப்படி பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


முகத்தை போலவே பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும், அதை புறக்கணிப்பதே பாத வெடிப்புக்கு முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குதிகாலில் வெடிப்பு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. இதில் வலியும், சோகமும் அதிகமாக ஏற்படுவதுடன், சரியான பராமரிப்பு இல்லையென்றால், இரத்தப்போக்கு, தொற்றுகள் போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

பாத வெடிப்புக்கு காரணங்கள் என்ன?
பாத வெடிப்புக்கு பல காரணங்கள் உள்ளன:

  • ஊட்டச்சத்து குறைபாடு

  • தைராய்டு சிக்கல்

  • உடல் எடை அதிகரிப்பு

  • காலணிகளை அணியாமல் கரடுமுரடான தரையில் நடப்பது

  • சுத்தமாக பாதங்களை தேய்க்காமல் குளிக்க வேண்டும் என்பதைக் தவிர்ப்பது

  • அழுக்கு சேர்தல்

  • பித்தம் அதிகமாகும் நிலை

  • தோல் அலர்ஜி

  • முறையான காலணிகளை அணியாதது

இந்த காரணிகள் காலப்படையாது வெடிப்பை ஏற்படுத்துகின்றன.

வெடித்த பாதங்களை சிகிச்சை செய்ய எளிய இயற்கை வழிகள்:

1. வாஸ்லைன் + எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் வாஸ்லைனில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கால்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, வெடிப்பு பகுதிகளில் இந்த கலவையை தடவி, மசாஜ் செய்யவும். இரவில் தடவி தூங்குங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

2. நேரடி எலுமிச்சை தேய்க்கும் முறை
வெறும் எலுமிச்சை பழத்தை வெடிப்பு உள்ள பகுதியில் நேரடியாக தேய்க்கவும். பத்து நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவுங்கள். இதனை தினமும் செய்தால் மென்மையான மாற்றம் காணப்படும்.

3. எப்சம் உப்பு சிகிச்சை
ஒரு வாஷ்பேசினில் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் எப்சம் உப்பு சேர்க்கவும். கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து, சுத்தம் செய்யவும். இந்த முறையை வாரத்தில் 2 முறை செய்வது சிறந்தது.

4. கற்றாழை ஜெல் + எலுமிச்சை + டீ ட்ரீ ஆயில்
வெதுவெதுப்பான நீரில் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் டீ ட்ரீ ஆயில் சேர்த்து கலக்கவும். கால்களை 20 நிமிடங்கள் அதில் ஊறவைக்கவும். பின்னர் மென்மையான துணியால் துடைத்து, மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். இது பாத வெடிப்பை மட்டுமல்ல, பாதத்தை மென்மையாகவும் வைத்திருக்கும்.

பாதங்களை தினசரி சுத்தமாக வைத்தல், சரியான காலணிகளை அணிதல், உடல் எடையை கட்டுப்படுத்தல், தேவையான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தை உட்கொள்வது போன்ற அடிப்படை பராமரிப்புகள் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் தவிர்க்கலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இவ்வாறான இயற்கை நிவாரணங்கள், குதிகால் வெடிப்பை நிரந்தரமாக கட்டுப்படுத்த உதவுகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cracked heels A permanent solution to cracked heels with just one lemon Do this


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->