அடிக்கிற வெயிலில்.. உண்டாகும் நோய்.. தப்பிக்க கருப்பட்டியை வைத்து இப்படி செய்ங்க.! - Seithipunal
Seithipunal


கருப்பட்டி தமிழர்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று. பழங்காலந்தொட்டே கருப்பட்டி தேநீருக்கு பயன்படுத்தி வரும் வழக்கம்  நம்மிடம் இருந்து வந்தது. நாளடைவில் வெள்ளை சர்க்கரையின் மோகத்திற்கு மக்கள் அடிமையாகி கருப்பட்டி மறந்தனர். கருப்பட்டி ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் பல நன்மைகளையும் உள்ளடக்கியது.

கருப்பட்டியில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், மாங்கனிசு, ஃபோலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கருப்பட்டியுடன் சீரகம் மற்றும் சோம்பு சேர்ந்து தேநீர் குடிக்கும் போது நம் உடலை நீரேற்றுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது கோடை வெப்பத்தினால் ஏற்படும் பல நோய்களையும்  தவிர்க்க உதவுகிறது.

சூடான பாலில் கருப்பட்டியுடன் பனங்கற்கண்டு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வர தொண்டைப்புண் தொண்டையில் ஏற்படும் வலி மற்றும் சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகும். மூல நோயின் அவஸ்தையினால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

கருப்பட்டி வாயு தொல்லை மற்றும் அஜீரணம் ஆகிவிட்டது சிறந்த மருந்தாகும் ஓமத்துடன் கருப்பட்டியை சேர்த்து பயன்படுத்தும் போது இவை வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு  அஜீரண கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க  கருப்பட்டி பயன்படுகிறது. தொடர்ந்து கருப்பட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. பருவமடைந்த பெண்கள் உளுந்தங்களியுடன் சேர்த்து கருப்பட்டி சாப்பிட்டு வர  இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதோடு கர்ப்பப்பை வலுவாகும் மேலும் மாதவிடாயின் போது ரத்தப் போக்கை சீரடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefts of using palm jaggery


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->