பூண்டு சாப்பிட்டால் இதனை கட்டுப்படுத்திவிடுமா?.!!
பூண்டு சாப்பிட்டால் இதனை கட்டுப்படுத்திவிடுமா?.!!
உணவின் நறுமணம் மற்றும் சுவைக்காக உணவில் அனைவரும் பூண்டை சேர்ந்து கொள்கிறோம். அந்த வகையில் பூண்டாள் நமக்கு ஏற்படும் பல நன்மைகளை பற்றி காண்போம்.
பூண்டானது சிறந்த ஆண்டி - பயாட்டிக்காக செயல்படுவதால்., இரத்தத்தில் ஏற்படும் அழுத்தத்திற்க்கான அறிகுறியில் இருந்து விலக சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.

பூண்டின் மருத்துவ குணத்தால் கல்லீரல்., சிறுநீர்ப்பை போன்றவை எந்த விதமான பிரச்சனையும் இன்றி சரியாக செயல்படும். மேலும் நமக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனைகளான அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
அதிக வேலைப்பளு உள்ளவர்கள் முதலில் பாதிக்கப்படும் மனஅழுத்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கும்.
.jpg)
தினம் 2 பூண்டு பற்கள் சாப்பிட்டு வர இரத்த அழுத்தமனானது சரியான நிலையில் சமன் செய்யப்பட்டு., இதயம் சம்பந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.
நமது உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு., தேவையற்ற புழுக்களும் வெளியேற்றப்பட்டு உடல் நலமானது சிறந்த முறையில் சீராக்கப்படுகிறது.

மேலும் பூண்டானது காசநோய்., நிமோனியா., நெஞ்சுச்சளி மற்றும் ஆஸ்துமாவிற்கு உரிய நிவாரணம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 பூண்டு பற்கள் சாப்பிடுவதே நல்லது., மாறாக அளவுக்கு மீறி சாப்பிட்டுவிட்டு (அலர்ஜி ஏற்படும் சிலர்) அவதியுற வேண்டாம்.
English Summary
BENEFITS TO EAT ON GARLIC.