சிறுநீரக நோய்களுக்கு அற்புத மருந்தாகும் வாழைத்தண்டின் நன்மைகள்.!
Benefits of vazhai thandu
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று அதிக அளவில் காணப்படும் நோயாகும். அதற்குக் காரணம் காரமான உணவு, குறைவாக நீர் அருந்துதல், வரட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகிறது.
சிறுநீர் கற்களை அகற்ற மருந்துகளும் மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உண்ணும் உணவின் மூலம் எளிதாக சிறுநீர் கற்களை அகற்றலாம். அதன்படி வாழைத்தண்டு சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு நன்மைகளை கொடுக்கிறது.
வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக கற்களை எளிதாக அகற்றி விடலாம். அதிலும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

வாழைத்தண்டு சாப்பிடுவதால் நமது உடல் குளிர்ச்சி அடைந்து, வயிற்றுப்புண் ஏற்படுவதை குறைக்கிறது. மாதவிடாய் காலத்தில் வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடல் வலுவடையும். மேலும் மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் ரத்தப்போக்கக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
வாழைத்தண்டு சாப்பிடுவதால் சிறுநீரக பாதையை தூய்மைப்படுத்தி சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுகளை நீக்குகிறது.
அதேபோல் சர்க்கரை நோயாளிகள் வாழைத்தண்டு சாப்பிடுவதால் இன்சுலினை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதை தடுக்கிறது.
வாழைத்தண்டில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே வாரத்திற்கு மூன்று முறை வாழைத்தண்டு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
English Summary
Benefits of vazhai thandu