சுக்குவுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்கள்.?
Benefits of sukku
சுக்கு உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் சுக்கு உடன் வேறு சில பொருள்களை சேர்த்து சாப்பிடும் போது அது மருத்துவ தீர்வாக இருக்கும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இந்த பதிவில் அது குறித்து பார்க்கலாம்.
திப்பிலி, மிளகு, சித்தரம் மற்றும் சுக்கு உள்ளிட்டவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் நாள்பட்ட நெஞ்சு சளி தீரும்.
எலுமிச்சை சாறுடன் சுக்குத்தூளை சேர்த்து கலந்து குடித்தால் பித்தம் நீங்கும்.

சுக்கு உடன் ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால் வாயு பிரச்சனைகள் நீங்கும்.
வேப்பம்பட்டை மற்றும் சுக்கு இரண்டையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ஆரம்ப காலத்தில் ஏற்படும் வாதம் குணமாகும்.
மிளகு, கருப்பட்டி மற்றும் சுக்கு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சோர்வு நீங்கும்.
வெந்தயம் மற்றும் சுக்கு பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி நீங்கும்.