சர்க்கரைவள்ளி கிழங்கில் கொட்டி கிடக்கும் மருத்துவ நன்மைகள்.!
Benefits of sakkara Valli kizhangu
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல வகை காய்கறிகள் மற்றும் கிழங்குகள் உள்ளன. ஆனால் நாம் அவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அந்த வகையில் எளிதாக கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது.
உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சர்க்கரைவள்ளி கிழங்கு வயது வித்தியாசம் இல்லாமல் உதவுகிறது.
கிழங்கு வகைகளில் அதிக அளவு கொழுப்பு இருக்கும் ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதன் காரணமாக மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் உள் உறுப்புகளின் வீக்கத்தை குறித்து இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ கண் மற்றும் தோள்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து போலிக் அமிலம் ஆனது சர்க்கரைவள்ளி கிழங்கு மூலம் எளிதாக கிடைக்கிறது. இதனை அதிகம் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு மிகவும் நல்லது.
English Summary
Benefits of sakkara Valli kizhangu