மலட்டு தன்மை நீங்கி, விரைவில் குழந்தை வரம் பெற வேண்டுமா? தவறாமல் தினமும் இந்த பழத்தை மட்டும் சாப்பிடுங்க.! - Seithipunal
Seithipunal


வாழைப்பழங்களில் ஒருவகையான செவ்வாழை பழம் மற்ற பழங்களை விட அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது.

இப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுகிறது மேலும் உயர்தர பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் பெருமளவில் உள்ளது.

செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் காணப்படும் பொட்டாசியம் உடலில் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கிறது .மேலும் கால்சியம் திறனை அதிகரித்து, எலும்புகளுக்கு பெரும் வலுசேர்க்கிறது.

பல் வலி, பல் ஆடுதல்,ஈறு பிரச்சினைகள் போன்ற பலவகையான பல் வியாதிகளை குணப்படுத்த செவ்வாழைப்பழம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இந்நிலையில் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் பல் தொடர்புடைய பிரச்சினைகள் நீங்கி, பல் உறுதிப்படும்.

மேலும் கண்பார்வை குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் செவ்வாழை செயல்படுகிறது. கண் பார்வை மங்கத் தொடங்கியவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம்கண்பார்வை குறைபாட்டை சரிசெய்யலாம்.

 மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்குப் பின்னர், தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் முற்றிலும் குணமாகும் பார்வைை தெளிவடையும்.

நரம்பு தளர்ச்சி ஏற்படுபவர்களுக்கு உடலில் பலம் குறைந்து ஆண்மை குறைபாடு ஏற்படும். அவ்வாறு பாதிக்கப்பட்டு குழந்தைப் பேறு அடைய முடியாதவர்கள் தினமும் ஒரு செவ்வாழை மற்றும் அரை ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி விரைவில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

மேலும் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு 21 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of red babanas for pregnancy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->